Posts

Showing posts from September, 2018

زيد بن حارثا رضي الله عنه

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه  🌾 🌾 صباح الخير 🌾 🌾 உங்கள் மீதும் அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!! بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان امين امين يارب العالمين ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ======================== * ஜைது பின் ஹாரிஸா رضي الله عنه!* ஹாரிதா இப்னு ஷராஹீலும் ஸுதா பின்த் ஃதஅலபாவும் கணவன்-மனைவி. இவர்களுக்கு ஸைது இப்னு ஹாரிதா,ஜப்லா இப்னு ஹாரிதா என்று இரண்டு மகன்கள். சிறு குடும்பம்; அமைதியான வாழ்க்கை என்று காலம் கழிந்து கொண்டிருந்தது. ஒருநாள் ஸுதா தம் கணவரிடம், ‘‘நான் சென்று என் சொந்த பந்தங்களைப் பார்த்துவிட்டு வருகிறேன்’’ என்று அனுமதி பெற்றுப் பயணம் கிளம்பினார். தம்முடன் சிறுவயது மகன் ஸைதையும் அழைத்துக் கொண்டார். ஹாரிதா, தம் மனைவியின் பயணத்திற்கான மூட்டை முடிச்சுகளைக் கட்டித் தந்தார். வணிகக் கூட்டத்துடன் கிளம்பிய தம் மனைவியையும் மகனையும் கூடவே சிறிது தூரம் வரை நடந்து சென்று வழியனுப்பி வைத்தார். ஸுதாவின் உறவினர்கள் மஅன் குலத்தார்...