زيد بن حارثا رضي الله عنه



السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕



========================

*ஜைது பின் ஹாரிஸா رضي الله عنه!*

ஹாரிதா இப்னு ஷராஹீலும்
ஸுதா பின்த் ஃதஅலபாவும்
கணவன்-மனைவி. இவர்களுக்கு
ஸைது இப்னு ஹாரிதா,ஜப்லா இப்னு ஹாரிதா என்று இரண்டு மகன்கள். சிறு
குடும்பம்; அமைதியான
வாழ்க்கை என்று காலம் கழிந்து கொண்டிருந்தது.
ஒருநாள் ஸுதா தம்
கணவரிடம், ‘‘நான் சென்று என் சொந்த பந்தங்களைப்
பார்த்துவிட்டு வருகிறேன்’’
என்று அனுமதி பெற்றுப் பயணம் கிளம்பினார். தம்முடன்
சிறுவயது மகன்
ஸைதையும்
அழைத்துக் கொண்டார்.
ஹாரிதா, தம் மனைவியின்
பயணத்திற்கான மூட்டை
முடிச்சுகளைக் கட்டித் தந்தார். வணிகக் கூட்டத்துடன்
கிளம்பிய தம்
மனைவியையும் மகனையும்
கூடவே சிறிது தூரம் வரை நடந்து சென்று வழியனுப்பி
வைத்தார்.

ஸுதாவின் உறவினர்கள் மஅன்
குலத்தார். அவர்களுக்கும்
பனூ அல் ஃகைன்
கோத்திரத்திற்கும் இடையே ஏதோ பழைய பகை
இருந்திருக்கிறது. நல்ல ஒரு வாய்ப்பு அமைந்தபோது,
பனூ அல் ஃகைன்
கோத்திரத்தினர் மஅன் குலத்தினரின் ஊரைச் சுற்றி
வளைத்தனர். சகட்டுமேனிக்குப்
போட்டுத் தாக்கினார்கள்.
பணம், கால் நடைகள் என்று
கொள்ளையடித்து இலவச
இணைப்பாய் நிறைய
மக்களையும்
சிறைப்பிடித்து, போயே போய் விட்டனர். அவர்கள்
சிறைப்பிடித்த மக்களுள்
அவ்வூருக்கு விருந்தினராக
வந்திருந்த ஸுதாவின் எட்டு
வயது மகன் ஸைது இப்னு ஹாரிதாவும் ஒருவர்.

ஊர்விட்டு ஊர்வந்து, தம் மகனைக்
கொள்ளையர்களுக்குப் பறிகொடுத்து, திகைத்து,
கதறி நின்றார் ஸுதா!

பனூ அல் ஃகைன்
கொள்ளையர்கள் தாங்கள்
சிறைப்பிடித்தவர்களை விற்பதற்குக் கொண்டு சென்ற
சந்தை உக்காள். அங்கு ஹகீம்
பின் ஹிஸாம் இப்னு குவைலிதுக்கு
அடிமையாக விலைபோனார்
சிறுவர் ஸைது இப்னு ஹாரிதா. அங்குத் துவங்கி,
எசமானர்கள் பலரின் கை மாறி,
இறுதியாக அல்-அமீன் முஹம்மதிடம் வந்தடைந்தார்
அவர். அல்-அமீன் அவர்களின்
அரவணைப்பில் ஸைதின்
வாழ்க்கை அடிமை என்ற
அடிப்படையில் துவங்கியது
பெயரளவில்தானே தவிர, அது
அடிமைத் தளைக்குச் சற்றும்
தொடர்பற்ற உன்னத வாழ்க்கை.
பெற்ற மகனைக்
கவனிப்பதைப்போல் அன்பு, கனிவு, அரவணைப்பு என்று
பாசம் கிடைக்கக் கிடைக்க, அந்த மாமனிதரின் நிழலில் உயர் ஒழுக்கத்துடன் வளர ஆரம்பித்தார் ஸைது இப்னு
ஹாரிதா رضي الله عنه.

பெற்ற மகனைக்
கொள்ளையரிடம்
பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக வீடு
திரும்பினார் ஸுதா.
மரணத்தால் ஏற்படும் பிரிவு
ஒருவகை சோகமென்றால்,
விழித்துக்கொண்டிருக்கும் போதே கண்ணெதிரே மகனை ஒரு கூட்டம் பிடுங்கிச்
செல்வது பெருந்துயரம்!
கையாலாகாத்தனம்,
கழிவிரக்கம், ஆத்திரம் ஆகிய பல
உணர்ச்சிகள் அதில் கலந்து நாள்தோறும் நொடிதோறும்
அது வருத்தி எடுக்கும்.
ஸுதாவின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது! ஆனால் தம் மகன் எப்படியும்
கிடைத்துவிடுவான் என்று ஏதோ ஒரு நம்பிக்கை. அது
அசட்டு நம்பிக்கையா,
அர்த்தமுள்ளதா என்று தெரியாது. ஆனால் அதில்
அவரது நாள்கள்
கடந்துகொண்டிருந்தன.
இரவெல்லாம் அழுகையில்
கழியும். ஒரு கட்டத்தில் தம்
மகன் உயிருடன்
இருக்கின்றாரா இல்லையா
என்பதே அவருக்குக்
கேள்விக்குறியாகிப் படுத்தி எடுத்தது. இறந்துவிட்டார்
என்று தெரிந்தாலாவது
ஒரேயடியாக அழுது
முடித்து சோகத்திற்கு
முற்றுப்புள்ளி
வைத்துவிடலாமே
என்றுகூட அவருக்குத்
தோன்றியது.
தாயின் பாசத்திற்குக்
குறையாத பாசக்காரத்
தந்தையாக இருந்தார்
ஹாரிதா. மகனைத்
தொலைத்துவிட்டு மனைவி மட்டும் திரும்பியதும்
அதிர்ச்சியிலும்
சோகத்திலும்
நிலைகுலைந்து போனது அவரது வாழ்க்கை. அதற்காக அவர் நொறுங்கிப்போய்
வீடடங்கிவிடாமல் தேட ஆரம்பித்தார். எப்படியாவது
தம் மகனைக்
கண்டுபிடித்துவிட
வேண்டும் என்று அவருக்கு
உரமேற்பட்டுவிட்டது.
தென்பட்ட திசையெல்லாம்
பயணித்தார். அங்குக் கண்ணில்
பட்டவரிடமெல்லாம் விசாரித்தார். அழுகையும்
சோகமும் மிகைத்துப்போய்,
கழிவிரக்கம் மிகுந்து
கவிதையெல்லாம் வடித்தார்.
அரபியர்கள் அதில் மிகத்
தேர்ந்திருந்தார்கள். காதல், பாசம், வீரம், சோகம், வரலாறு
என்று அனைத்திற்கும்
அவர்களுக்குக் கவிதை.
ஹாரிதா வடித்த கவிதை
அரபு மொழிக்கே உண்டான
உயர் தரக் கட்டமைப்பில்
உள்ளதால், அதை நமக்கு விளங்கும் தமிழில்
இப்படியாகப்
புரிந்துகொள்ளலாம்.

என் செய்வேன் என்னிறைவா...
என்னருமை ஸைதுக்காக
கண்ணழுது ஓயவில்லை!

கைசேதம் இக்கொடுமை
மறைந்துபோன செல்ல மகன்
மலைகளில் திரிகின்றானோ
மண்ணுக்குள் புதைந்து அவன்
விண்ணுக்கே ஏகினானோ
மீட்டுத்தா என்னிறைவா!
மீண்டும்தா எனக்கவனை!
மண்ணுலகைத் தந்ததுபோல்
மனமுருகிப் போற்றிடுவேன்
கதிரவன் எழும் காலையும்
முதிர்ந்தவன் விழும்
மாலையும்
புதிர்போலத் தெரியுமென்
புதல்வனின் நினைவுகளே!

உச்சிப் பொழுதில் அவன்
உச்சிமுகர மனம் விழையும்
கடுங்காற்று
அடிக்கும்போதும் நான் படும்பாடு
மகன்  நினைவால்
துக்கம் உயிர் துளைத்திடவே
தூக்கம் வராக் கணங்களினால்
பொங்கிப் பொங்கி
அடங்குகின்றேன்
அவன் போன இடம்
புரியவில்லை!

புதல்வா உனைத்தேடி
புயலாய் அலைந்திடுவேன்
புதிதாய்த் திசையிருப்பின்
அதிலும் நுழைந்திடுவேன்!
கால்குளம்பு உளியாக...
பாலை மணல் முழுதும்
சலித்து உனை மீட்காமல்
சாகாது என் ஒட்டகம்!

இப்படி ஹாரிதா தம் மகனைத்
தேடி அலைந்து
திரிந்துகொண்டிருக்க, அவர்
குலத்தினர் சிலர்
யாத்திரைக்காக மக்கா
சென்றனர். அஞ்ஞானக்
காலத்தில் அம்மக்கள் அங்கு
நட்டுவைக்கப்பட்டிருந்த
சிலைகளுக்கு வணக்கம்
செய்யும் யாத்திரை. அவர்கள்
கஅபாவைச் சுற்றி
வரும்போது யதேச்சையாய்
ஸைதை நேருக்குநேர்
பார்த்து விட்டனர். ஸதை
அடையாளம் தெரிந்துபோய்
அவர்களுக்கு ஏக ஆச்சரியம்!
‘மக்காவிற்கு எப்படி வந்தாய்?
என்ன ஏது’ என்று விசாரிக்க,
நடந்ததையெல்லாம் சொன்னார்
ஸைது. இறுதியில்,
“பெருந்தன்மையுள்ள ஓர்
உயர்குண மனிதரிடம் நான்
இங்குப் பத்திரமாக
இருக்கிறேன் என்று என்
பெற்றோரிடம் தெரிவித்து
விடுங்கள்” என்று தம்
பெற்றோருக்குச் செய்தியும்
சொல்லி அனுப்பினார்.
யாத்திரைக் கடமைகளை
முடித்துக்கொண்டு தங்கள் ஊர்
திரும்பிய அவர்கள் உடனே
ஹாரிதாவைச் சந்தித்தார்கள்.
‘உம் மைந்தர் மக்காவில்
இருக்கிறார். அடிமையாக
வளர்ந்து வருகிறார். நாங்கள்
பார்த்துப் பேசினோம்” என்று
அனைத்தையும்
விலாவாரியாக விவரித்தனர்.
அதைக் கேட்டு
ஹாரிதாவுக்குச் சொல்லி மாளாத
 மகிழ்ச்சி! வற்றிய
கண்ணில் ஆனந்தக் கண்ணீர்
பொங்கியது! அதற்குமேல்
ஒரு நொடிப் பொழுதும்
வீணாகுமா என்ன? ஓட்டமாய் ஓடிப்
 பயணத்திற்கான
கால்நடையைத் தயார் செய்தார்.

 ‘அடிமையாகக்
கிடக்கிறானாமே’ என்று தம்
மகனை விடுவிக்கப் பணம் திரட்டி
 மடியில்
கட்டிக்கொண்டார்;
துணைக்குத் தம்
சகோதரரையையும்
அழைத்துக்கொண்டார்;
‘ஸுதா உன் கவலைக்கு
விடிவு. நான்போய் நம் மகனை
 மீட்டு வருகிறேன்’
என்று மனைவியிடம்
விடைபெற்று, மக்காவை
நோக்கி அவரது பயணம்
துவங்கியது.

ﺍﻟﻜﺘﺐ ‏» ﺳﻴﺮ ﺃﻋﻼﻡ ﺍﻟﻨﺒﻼﺀ

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

Comments

Popular posts from this blog

புர்தா ஷரீப்

சுன்னத்து பேனுவோம்

புர்தா ஷரீப்