புர்தா ஷரீப்

பகுதி: 2  அத்தியாயம் : 1
தலைப்பு : அன்பின் வெளிபாடு.   

அரபி மூலம் :
இமாம் ஷரபுத்தீன்
பூஸிரி (ரஹ்) அவர்கள்.

____________________________

தமிழ் கவியாக்கம் :
..................................

மௌலவி
S.K.M. ஜெகபர்தீன் உலவிய்யு.
பேராசிரியர்,
மன்ப உல் உலா அரபிக்
கல்லூரி. கூத்தாநல்லூர்.
செல் : 9965737640.
_____________________________
பகுதி : 1 ஐ  கண்டு,
எனது இந்த முயற்சியை
ஊக்குவித்து கருத்துக்களை
அனுப்பிய அனைத்து
பெரிய உள்ளங்களுக்கும்
மிக்க நன்றி.....!

அல்ஹம்துலில்லாஹ்.....!
............................................................

   புர்தா மெட்டில் படிக்கவும்.

______________________________
புர்தா கவிதை : 2.

ام هبت الريح من تلقاء كاظمة 
واومض البرق في الظلماء من اضم.

"காழிமா" திசை  வழியே,
              கடுங்காற்று வீசியதா !                                       

காரிருள் சூழ் " இழமி " ல்,
     ஒளிமின்னல் இலங்கியதா!
..........................................................
சொற் பொருள் :
காழிமா : இடத்தின் பெயர்.
இழம்.     : இடத்தின் பெயர்.
______________________________
புர்தா கவிதை : 3

فما لعينيك ان قلت اكففا همتا
وما لقلبك أن قلت استفق يهم.

உன்னீரு விழிக்கென்ன நீ,
    தடுத்துரைத்தும்  கசிகிறதே !

உன் மனதுக் கென்னவோ நீ,
" பொறு " வென்றும் பதறிடுதே !
 ..........................................................
சொற் பொருள் :

உன்னீரு  :
            உன்னுடைய இரண்டு
 விழி.................. : கண்
கசிகிறதே........: அழுகிறதே.     வென்றும்........ : என்று கூறியும்.
______________________________
தொடரும்...

Comments

Popular posts from this blog

புர்தா ஷரீப்

சுன்னத்து பேனுவோம்