பல்

*•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••*


நபி (ஸல்)அவர்களின் முறை  மூன்று விரல்களைக் கொண்டு           சாப்பிடுதல்


*ஹள்ரத் கஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று விரல்களைக் கொண்டு சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடிந்ததும் அதை நன்றாக சூப்பிக் கொள்வார்கள். (நூல் : முஸ்லிம்)*

வேறு சில ஹதீஸ்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு மேலும் ஐந்து விரல்களைக் கொண்டு சாப்பிட்டதாகவும் வருகிறது. எனினும் பெரும்பாலான நேரங்களில் மூன்று விரல்களைக் கொண்டு சாப்பிட்டதாகவே வருகிறது. அதனால் சிறுசிறு கவளமாக எடுத்துண்ண முடியும். நன்றாக அரைத்து சாப்பிடவும் முடியும்.

*விஞ்ஞானம்*: பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் “உணவை நன்றாக அரைத்து சாப்பிடாவிட்டால் பற்கள் வெகுசீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. வாயில் ஒரு பக்கமாகவே அரைத்து சாப்பிட்டாலும் மறுபக்கம் பழுதடைந்து விடுகிறது. எனவே உணவை நன்றாக அரைத்துச் சாப்பிடுங்கள். மட்டுமின்றி சரியாக அரைக்காமல் அப்படியே முழுங்கினால் குடலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வயிறு அழற்சி (Stomack Inflamation) உண்டாகிறது. வயிற்று அமிலத்தன்மை (Stomack Asititie) குறைவு ஏற்பட்டு நோய் உண்டாவதுடன் செரிமானம்
(Digestive System) சரியாக ஏற்படுதில்லை” என்று கூறுகிறார்கள். (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)
*#பகிருங்கள்...*

Comments

Popular posts from this blog

புர்தா ஷரீப்

சுன்னத்து பேனுவோம்

புர்தா ஷரீப்