தொலைக்காட்சி பார்தால் மரணம்

அதிக நேரம் தொலைக்காட்சி பார்தால்  விரைவில் மரணம்


தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்தால் பல்வேறு நோய்கள் வருவதோடு முன்கூட்டியே மரணம் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 


தொலைக்காட்சியை மக்கள் பார்ப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் ஓய்வு பெற்றவர்கள், முதியவர்கள், வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு பொழுது போகாமல் அதிக நேரம் தொலைக்காட்சியை பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒருசிலர் விருப்பப்பட்டு பல மணி நேரம் தொலைக்காட்சியை பார்ப்பதும் உண்டு இப்படி அதிகநேரம் பார்ப்பதால் சர்க்கரை நோய் வருவதற்கும், இருதய நோய் ஏற்படுவகழ்ரும்  முன்கூட்டியே மரணம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

 அமெரிக்காவில் உள்ள ஹார்டுவார்டு சுகாதார ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தால் 2-வது வகையான சர்க்கரை நோய் 20 சதவீதம் அதிகரிப்பதற்கும் இருதய நோய் 15 சதவீதம் அதிகரிப்பதற்கும்  வாய்ப்பு உள்ளது என்றும் மேலும் இயற்கையாக மரணம் அடைவதற்கு முன்பே சாவு ஏற்படுவதற்கும் 13 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் டி.வி.பார்ப்பதை குறைத்துக்கொண்டால் இந்த நோய்களை தவிர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று அந்த ஆய்வு மையத்தின் பேராசிரியர் பிராங்க் ஹூ தெரிவித்துள்ளார்.


 டிவி பார்க்கும் குழந்தைகளின் கற்கும் திறன் குறைகிறது:ஆய்வறிக்கை

 டிவி பார்ப்பது குழந்தைகளின் கற்கும் திறனைப் பாதிக்கிறது.அமெரிக்காவின் சியாட்டிலில் வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஆய்வில் கூறியிருப்பதாவது:குழந்தைகளின் கற்கும் திறனானது வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசுவதைக் கேட்பதால் இயல்பாக வளரக்கூடியது.இந்த இயல்பான வளர்திறனானது சமீப காலத்தில் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கிப் பேசாமல் டிவி பார்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுவதுதான் எனத் தெரியவந்துள்ளது.

2 மாதம் முதல் 2 வயது வரை உள்ள 329 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியதில் குழந்தைகளுக்கு டிவி சத்தம்தான் அதிக பரிச்சயமானதாகத் தெரிகிறது.இது மட்டுமல்லாமல் பெரியவர்களிடம் பேசுவதற்கும், பெரியவர்களின் பேச்சை கேட்பதற்கும் குறைவான வாய்ப்பு அமைவதால் குழந்தைகளின் பேச்சுத் திறனும் பாதிக்கப்படுகிறது.டிவி பார்க்காத குழந்தைகளின் கற்கும் திறன் அதிகமாகவும், டிவி பார்க்கும் குழந்தைகளின் கற்கும் திறன் குறைவாகவும் உள்ளது.

இதே போன்று மாசசூùஸட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் குறைந்த நேரமே செலவிடுகின்றனர். இதனால் குழந்தைகளின் கற்கும் திறன் குறைகிறது எனத் தெரியவந்துள்ளது.இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் டிவி பார்ப்பதன் மூலம் பேசக் கற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்புடையது அல்ல.குழந்தைகளுக்கு 2 வயது முடியும் வரை பெற்றோர்கள் டிவி பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.குழந்தைகள் அதிக நேரம் டிவி பார்ப்பதைப் பெற்றோர்கள் தடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் குழந்தைகளின் கற்கும் திறன் மேம்படக்கூடும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

*#நன்றி:-தினமணி*

Comments

Popular posts from this blog

புர்தா ஷரீப்

சுன்னத்து பேனுவோம்

புர்தா ஷரீப்