உணவு

*•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••*

  நபி (ஸல் ) அவர்களின் முறை

அளவோடு உண்டு வளமோடு வாழ்!


*ஹள்ரத் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். ஆதமுடைய மக்களின் நிரம்பக் கூடிய பை களில் மிகவும் கெட்டது அவர்களின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நேராக்கிக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும். (நூல் : திர்மிதி)*

*ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை தங்களது குத்பாவில் “நீங்கள் வயிறு நிரம்ப உண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். அப்படி வயிறு நிரம்ப உண்ணுவதால் தொழுகையில் சோம்பலும் உடலுக்கு நோவினையும் உண்டாகிறது. எனவே உணவில் நடுநிலையைக் கையாளுங்கள். அது உங்களின் பெருமையை தூரமாக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். வணக்கம் புரிய சக்தி தரும். அறிந்து கொள்ளுங்கள்! மனிதன் தனது மார்க்கத்தை விட மனோ இச்சையை தேர்ந்தெடுக்கா தவரை அவன் அழியமாட்டான்” என்று கூறியுள்ளார்.*

*விஞ்ஞானம்🔰* : பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பார்ட் என்பவர் மிக நீண்ட ஆய்விற்கு பிறகு எப்போதும் தேவையை விட அதிகம் சாப்பிடும் மனிதர்களுக்கு கீழ்க்கண்ட நோய்கள் துளிர்விடுவதாக கூறியுள்ளார்.

*1. Brain Diseases (மூளை சம்பந்தப்பட்ட நோய்கள்)*

*2. Eyes Diseases (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்)*

*3. E.N.T. Diseases (காது. மூக்கு,தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள்)*

*4. Chest & Loung Diseases (தோள் புஷம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள்)*

*5. Heart & Volves Diseases (இதயம்,நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்)*

*6. Gall Bladder Diseases (பித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்)*

*7. Diabetese (நீரழிவு நோய்) ஷிuரீணீக்ஷீ*

*8. High Blood Pressure (அதிக இரத்த அழுத்தம்)*

*9. Depression (மன அழுத்தம்)*

மேலும் அவர் தேவையை விட அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மேற்கண்ட நோய்களின் அறிகுறிகள் தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதால் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)
*#படியுங்கள்,*
*#சிந்தியுங்கள்....*
*#செயல்படுங்கள்,*
*#பகிருங்கள்...*

Comments

Popular posts from this blog

புர்தா ஷரீப்

சுன்னத்து பேனுவோம்

புர்தா ஷரீப்