பிஜே

பிஜே யாரை பின்பற்றுகிறார்?
⛔🚫⛔🚫⛔🚫⛔🚫⛔🚫⛔🚫

ஆயிரத்தி முன்னூரு ஆண்டுகளுக்கு முன் உருவான வழிகேடான கூட்டங்கள்தான் ஜஹமியாக்கள் முஃஅதஸிலாக்கள் றாபிழாக்கள்.

மேலும் இவர்களைப்போன்று கவாரிஜிகள் முர்ஜியாக்கள் கதிரியாக்கள் அஷாரியாக்கள் என பல வழிகேடான தவ்ஹீத் இயக்கங்கள் தோன்றின . இவர்கள் யாரும் ஷிர்க் செய்பவர்கள் அல்ல!

இவர்களின் வழியில் நம்நாட்டில் காதியானிகள் தோன்றி ஸஹாபாக்கள் குர்ஆன் ஸுன்னாவை புரிந்ததுபோல் புரியாமல், மிர்ஸாகுலாம் புரிந்ததுபோல் புரிந்து நாசமாகிப் போய் வழிகேட்டில் வீழ்ந்தார்கள்.

இவர்கள் வரலாற்றில் அஹமதியாக்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

இதேவழியை இன்று தமிழ்நாட்டில் பிஜே பிரியர்கள் தொடர்கின்றார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் ...

பிஜே குர்ஆன் ஹதீஸ் விசயங்களில் இன்றுவரை என்னென்ன  சந்தேக கேள்விகளை எழுப்பி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கின்றாரோ? இவை அனைத்தும் நான் மேற்கூறிய அத்துனை வழிகேடான இயக்கங்கள் கூறிய கருத்துக்களாகும். இவரின் சொந்தகருத்துகள் அல்ல!

அப்படியானால் பிஜே யாரை பின்பற்றுகிறார்?

இவரின் கொள்கை, நபியை அச்சொட்றாக பின்பற்றிய சத்தியத்தில் உயிர்நீத்த ஸஹாபாக்களின்  கொள்கையா?

அல்லது மேற்கூறப்பட்ட வழிகேடர்களின் கொள்கையா?
நீங்கள் சிந்திக்கவேண்டும்!

பிஜே தவ்ஹீதைத்தானே சொல்கிறார்! அவரை திட்டுவதுதான் இவர்களுக்கு  வேலை என்று மார்க்கத்தை முறையாக பயிலாத சிலர் கூறுகின்றார்கள்!

பிஜே தவ்ஹீதைத்தான் சொல்கிறார்!
அந்த தவ்ஹீத் யாருடைய தவ்ஹீத்?

யாரிடமிருந்து எங்கிருந்து அந்த கல்வியை எடுக்கின்றார்? என்பதை நீங்கள் கவனிக்க வேண்டாமா? அது உங்கள்மீது மார்க்க பொருப்பல்லவா?

இவர் கூறுகின்ற தவ்ஹீத்

கவாரிஜிகள் கூறுகின்ற தவ்ஹீதா?

முஃஅதஸிலாக்கள் கூறுகின்ற தவ்ஹீதா?

றாபிலாக்கள் கூறுகின்ற தவ்ஹீதா?

கதிரியாக்கள் கூறுகின்ற தவ்ஹீதா?

ஜஹமியாக்கள் கூறுகின்ற தவ்ஹீதா?

முர்ஜியாக்கள் கூறுகின்ற தவ்ஹீதா?

அஹமதியா காதியானிகள் கூறுகின்ற தவ்ஹீதா?

யாருடைய  தவ்ஹீதை பிஜே அண்ணன் கூறுகின்றார்? எவருடைய தவ்ஹீதாதை பின்பற்றுகின்றார்?

அல்லது இவருக்கு தவ்ஹீத் சம்மந்தமாக புதிதாக ஏதும் வஹீ வந்ததா?

சிந்திக்க வேண்டும் !!

நபிகளாரிடம் நேரடியாக தவ்ஹீதைக் கற்ற மார்க்கத்தை பயின்ற ஸஹாபாக்களின் தவ்ஹீதை எடுப்பதா?

பிஜே அவர்களின் தலையில் உதித்த தவ்ஹீதை எடுப்பதா?

நபிகளாரிடம் நேரடியாக சட்டங்களை பயின்று அதை நடைமுறைப்படுத்தி பிறகு போதித்த  ஸஹாபாக்கள் கூறுகின்ற சட்டங்களை நம்பவேண்டுமா ?

முஃஅதஸிலாக்களின் தவ்ஹீதை சுமந்திருக்கின்ற பிஜே அவர்களின் சட்டங்களை விளக்கங்களை நம்பவேண்டுமா ?

இந்த இடத்தில் "லாஇலாஹ இல்லல்லாஹ்வை" முன்நிறுத்தி நேர்மையாக சிந்திக்க வேண்டும்.

ஆனால் பிஜே விரும்பிகள் நினைத்துக்கொள்கின்றார்கள்!!!
அண்ணன் எப்படியெல்லாம் சிந்திக்கின்றார்? பிஜேஅண்ணன் எப்பேர்பட்ட அறிவாலி? அண்ணன் எவ்வளவு பெரிய முஜதஹித்?? என்று மார்தட்டிக்கொள்கிறார்கள்.

சகோதரர்களுக்கு அல்லாஹ் சுபஹானுவத்தாலா ஹிதாயத்தை தரவேண்டும் .

இந்த உம்மத்தின் மார்க்கத்திற்கு யார் பாதுகாப்பு ? யாருடைய கல்வி பாதுகாப்பு ?

இவர்கள் கீழ்காணும் ஹதீஸை சிந்திக்க வேண்டும்

முஸ்லிம்4953.
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதோம். பிறகு நாங்கள், "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழும்வரை (இங்கேயே) அமர்ந்திருந்தால் நன்றாயிருக்கும்" என்று கூறிக் கொண்டு (அங்கேயே) அமர்ந்திருந்தோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, "ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தங்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதுவிட்டுப் பிறகு "தங்களுடன் இஷாத் தொழுகையையும் தொழும்வரை அமர்ந்திருப்போம்" என்று கூறினோம்" என்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் செய்தது "நன்று" அல்லது "சரி" என்று சொல்லி விட்டு, வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள். -(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமாக வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தக்கூடியவராக இருந்தார்கள்.-

பிறகு, "நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது (நாசம்)வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது (நாசம்)வந்துவிடும்.

"என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது (நாசம்)வந்துவிடும்" என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தில் இறுதிக் காலத்தவரிடையே சிலர் தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத (புதுப்புது) ஹதீஸ்களையெல்லாம் உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்கள் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (முஸ்லிம்)

எனவே ஸஹாபாக்கள் பாதையே மார்க்கத்தின் நேர்வழி!
அது அல்லாதவர்களின் பாதை அனைத்தும் நாசவழி!
என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்  !

இந்த அடிப்படையை தெளிவாக விளங்கிய TNTJ & SLTJ மவ்லவிகள் Dதாயிக்கள் பிஜேயின் வழிகேடான கொள்கையைவிட்டு வெளியாகி அஹ்லுஸ்ஸுன்னா கொள்கையின் பக்கம் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றார்கள்! அல்லாஹுஅக்பர்

அல்லாஹ் சுபஹானுவத்தாலா நம் அனைவருக்கும் நேர்வழியை தந்தருள் வானாக! ஆமீன்!

அன்புடன்...
MS. ரஹ்மத்துல்லாஹ்
நாச்சியார்கோவில்

Comments

Popular posts from this blog

புர்தா ஷரீப்

சுன்னத்து பேனுவோம்

புர்தா ஷரீப்